அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது - எடப்பாடி பழனிசாமி

April 27, 2023

அதிமுக - பாஜக கூட்டணி தொடர்வதாக டெல்லியில் இபிஎஸ் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் முதல் முறையாக பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். இரவு 9 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை டெல்லியில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தற்போது வரை அதிமுக - பாஜக […]

அதிமுக - பாஜக கூட்டணி தொடர்வதாக டெல்லியில் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளராக பதவியேற்ற பின் முதல் முறையாக பழனிசாமி நேற்று டெல்லி சென்றார். இரவு 9 மணியளவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தார். இதனைத் தொடர்ந்து இன்று காலை டெல்லியில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, பேசிய அவர், "நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. முந்தைய நாடாளுமன்ற தேர்தலில் இருந்து தற்போது வரை அதிமுக - பாஜக கூட்டணி தொடர்கிறது.

எங்களுக்கும், பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கும் எந்த தகராறும் கிடையாது. எல்லோரும் அவரவர் கட்சியை வளர்க்கத்தான் பார்ப்பார்கள். அதிமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் எல்லாம் சுதந்திரமாக செயல்படும் கட்சிகள். கூட்டணி என்று வரும்போது ஒற்றுமையாக செயல்பட்டு கூட்டணிக் கட்சி வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வோம்" என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu