கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம் விவகாரம் குறித்து நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்து அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக சட்டசபை கூட்டத்தொடரில் கள்ளக்குறிச்சி கள்ள சாராய மரண சம்பவம் குறித்து பேச அனுமதி கேட்டு அதிமுக எம்எல்ஏக்கள் அமளியில் ஈடுபட்டனர். இதனால் நடப்பு கூட்டத்தொடர் முழுவதும் அதிமுகவை சஸ்பெண்ட் செய்து சபாநாயகர் அப்பாவு உத்தரவிட்டார்.இந்நிலையில் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய விவகாரத்தில் சரியான நடவடிக்கை எடுக்காத திமுக அரசை கண்டித்தும், கள்ளக்குறிச்சி மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வலியுறுத்தியும் அதிமுக எம்எல்ஏக்கள் இன்று சென்னையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன்படி எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான உண்ணாவிரத போராட்டம் தொடங்கியுள்ளது. இதில் அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் கருப்பு சட்டை அணிந்து போராட்டத்தில் பங்கேற்றனர். மேலும் 400 க்கும் மேற்பட்ட போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது