மதுரையில் எய்ம்ஸ் நிச்சயமாக வரும் : அமைச்சர் மன்சுக் மாண்டவியா

December 10, 2022

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக கட்டி முடிக்கப்படும் என மக்களவையில் ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி அளித்துள்ளார். மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடர்பாக மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அளித்த பதிலில், மதுரை எய்ம்ஸில் மாணவர்களுக்கான வகுப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. நிரந்தர கட்டிடம் கட்டும் பணி விரைவில் தொடங்கும். முதலில் ரூ.1200 கோடி பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது அது திருத்தப்பட்டு ரூ.1900 […]

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை நிச்சயமாக கட்டி முடிக்கப்படும் என மக்களவையில் ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா உறுதி அளித்துள்ளார்.

மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணிகள் தொடர்பாக மக்களவையில் நேற்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு ஒன்றிய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா அளித்த பதிலில், மதுரை எய்ம்ஸில் மாணவர்களுக்கான வகுப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விட்டன. நிரந்தர கட்டிடம் கட்டும் பணி விரைவில் தொடங்கும். முதலில் ரூ.1200 கோடி பட்ஜெட் நிர்ணயிக்கப்பட்ட நிலையில், தற்போது அது திருத்தப்பட்டு ரூ.1900 கோடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

மதுரை எய்ம்ஸ் மூலம் தமிழக மக்களுக்கு சேவை செய்ய ஒன்றிய அரசு உறுதிபூண்டுள்ளது. எனவே இத்திட்டம் நிச்சயம் நிறைவேற்றபடும். நல்ல முறையில் மதுரை எய்ம்ஸ் கட்டிடம் கட்டி முடிக்கப்படும் என்று அவர் கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu