தீவிரவாதம் தொடர்பான செய்திகளை பரவ விடாமல் முடக்கும் நோக்கில் எக்ஸ் சமூக தளம் பணியாற்றி வருகிறது. இதற்கான தீர்வாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட புதிய அம்சத்தை கொண்டு வந்துள்ளது.
கடந்த 2009 முதல் 2021 வரை, எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவான தகவல்களை பகுப்பாய்வு செய்து, ஐ எஸ் ஐ எஸ் என்ற தீவிரவாத அமைப்பு தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளன. அதனை செயற்கை நுண்ணறிவு கருவியில் உள்ளீடு செய்து, தீவிரவாதம் தொடர்பான செய்திகளை கண்டறிய எக்ஸ் நிறுவனம் முன் வந்துள்ளது. அதன்படி, தீவிரவாதம் தொடர்பான செய்திகள் பதிவிடப்பட்டால், அவை உடனடியாக தடை செய்யப்படும். அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாண பல்கலைக்கழகத்தில் உள்ள ஆராய்ச்சியாளர்கள் இந்த செயற்கை நுண்ணறிவு அம்சத்தை உருவாக்குவதற்கு உதவிகள் செய்துள்ளனர். மேலும், தீவிரவாதம் தொடர்பான பதிவுகளை பகிரும் நபர்களின் செயல்பாடுகளை கண்காணிக்க எக்ஸ் தளம் திட்டமிட்டுள்ளது.