தாம்பரம் விமானப்படை தளத்தில் புதிய தலைவராக ஏர் கமாடோர் தபன் சர்மா பொறுப்பேற்றுக் கொண்டார்.
தாம்பரம் விமானப்படை தளத்தில் புதிய தலைவராக ஏர் கமாடோர் தபன் சர்மா பொறுப்பேற்றுக் கொண்டார். இந்த நிகழ்வை முன்னிட்டு ஒரு சிறப்பு அணிவகுப்பு நடைபெற்றது. தலைமை மாற்றத்தை குறிக்கும் வகையில், இந்த நிகழ்வு முழு மரியாதையுடன் மற்றும் இராணுவ மரபுகளை பின்பற்றி அனுஷ்டிக்கப்பட்டது.
ஏர் கமாடோர் தபன் சர்மா 1997-ம் ஆண்டு டிசம்பரில் இந்திய விமானப் படையின் பறக்கும் பிரிவில் போர் விமானியாக நியமிக்கப்பட்டார். அவர் ஏ வகை தகுதிவாய்ந்த பறக்கும் பயிற்றுவிப்பாளராக பணி புரிந்தவர். மேலும், அவர் தேசிய பாதுகாப்பு அகாடமி மற்றும் வெலிங்டனில் உள்ள பாதுகாப்பு பணியாளர் சேவைகள் கல்லூரியின் முன்னாள் மாணவராகும். மேலும் இவர் இந்திய வான்படையின் பல்வேறு வகையான விமானங்களில் 2,500 மணி நேரத்திற்கும் மேலாக பறக்கும் அனுபவம் கொண்டவர். தனது 25 ஆண்டுகளுக்கு மேலான சேவையில், அவர் இரண்டு போர் விமான ஸ்குவாட்ரன்கள் மற்றும் விமானப்படையின் விமானப் பணியாளர் தேர்வு வாரியம் ஆகியவற்றுக்கு தலைமை வகித்துள்ளார்.














