ஏர் இந்தியா - போயிங் ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவில் ஒரு மில்லியன் வேலை வாய்ப்புகள் ஏற்படும் - ஜோ பைடன்

February 15, 2023

இந்தியாவைச் சேர்ந்த ஏர் இந்தியா விமான நிறுவனம், போயிங் நிறுவனத்திடம் இருந்து அதிக எண்ணிக்கையில் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. இந்நிலையில், "இந்த ஒப்பந்தம் காரணமாக, அமெரிக்காவின் 44 மாகாணங்களில், சுமார் 1 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாகும். இதனால், அமெரிக்கா - இந்தியா இடையிலான இருதரப்பு உறவு மேலும் வலுப்படும்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்துள்ளார். ஏர் இந்தியா நிறுவனம், 190 பி737 மேக்ஸ் விமானங்கள், 20 பி787 […]

இந்தியாவைச் சேர்ந்த ஏர் இந்தியா விமான நிறுவனம், போயிங் நிறுவனத்திடம் இருந்து அதிக எண்ணிக்கையில் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. இந்நிலையில், "இந்த ஒப்பந்தம் காரணமாக, அமெரிக்காவின் 44 மாகாணங்களில், சுமார் 1 மில்லியன் வேலை வாய்ப்புகள் உருவாகும். இதனால், அமெரிக்கா - இந்தியா இடையிலான இருதரப்பு உறவு மேலும் வலுப்படும்" என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியிடம் தெரிவித்துள்ளார்.

ஏர் இந்தியா நிறுவனம், 190 பி737 மேக்ஸ் விமானங்கள், 20 பி787 விமானங்கள் மற்றும் 10 பி777 எக்ஸ் விமானங்களை ஆர்டர் செய்துள்ளது. எனவே, மொத்தமாக 220 ஆர்டர்களுக்கு 34 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. மேலும், கூடுதலாக, 50 பி737 மேக்ஸ் விமானங்கள், 20 பி787 விமானங்கள் ஆர்டர் செய்யப்பட்டுள்ளன. இதனால், ஒப்பந்த மதிப்பு 45. 9 பில்லியன் டாலர்களாக உயர்ந்துள்ளது. இது இந்தியா - அமெரிக்கா இடையே முக்கிய வர்த்தகமாக பார்க்கப்படுகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu