ஜப்பான் நிறுவனத்திடம் இருந்து 120 மில்லியன் டாலர் கடன் பெறும் ஏர் இந்தியா

December 20, 2023

ஏர் இந்தியா விமான நிறுவனம் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்து வருகிறது. அதற்காக, புதிதாக ஏர் பஸ் விமானம் ஒன்றை வாங்கி உள்ளது. அதன் பொருட்டு, ஜப்பானைச் சேர்ந்த SMBC நிறுவனத்திடம் 120 மில்லியன் டாலர்கள் கடன் பெற்றுள்ளது. ஏர் இந்தியா விமான நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து ஏ 350 - 900 என்ற அகலமான மற்றும் பெரிய விமானத்தை வாங்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் இந்த விமானம் ஏர் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. இதற்கான நிதி […]

ஏர் இந்தியா விமான நிறுவனம் தனது செயல்பாடுகளை விரிவாக்கம் செய்து வருகிறது. அதற்காக, புதிதாக ஏர் பஸ் விமானம் ஒன்றை வாங்கி உள்ளது. அதன் பொருட்டு, ஜப்பானைச் சேர்ந்த SMBC நிறுவனத்திடம் 120 மில்லியன் டாலர்கள் கடன் பெற்றுள்ளது.

ஏர் இந்தியா விமான நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து ஏ 350 - 900 என்ற அகலமான மற்றும் பெரிய விமானத்தை வாங்கியுள்ளது. கடந்த அக்டோபர் மாதத்தில் இந்த விமானம் ஏர் இந்தியாவுக்கு வழங்கப்பட்டது. இதற்கான நிதி பகுதியாக வழங்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், இந்த விமானத்திற்கான மீதி நிதியை வழங்குவதற்காக, கிப்ட் சிட்டியில் உள்ள தனது நிறுவன கிளை மூலம் ஏர் இந்தியா கடன் பெற்றுள்ளது. இது தொடர்பாக பேசிய SMBC நிறுவனத்தின் இந்திய பிரிவு தலைவர், ‘எங்கள் வங்கி நிறுவனத்தின் முதல் விமான கடன் இதுவாகும்’ என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu