இந்தியாவின் ஏர் இந்தியா விமான நிறுவனம், அமெரிக்காவின் அலாஸ்கா ஏர்லைன்ஸ் நிறுவனத்துடன் கூட்டணியில் இணைந்துள்ளது. இதனால், விமான பயணிகளுக்கு தடையில்லா விமான சேவை வழங்கப்பட உள்ளது.அலாஸ்கா ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் இந்தியா இடையில் ஏற்பட்டுள்ள இந்த கூட்டணியின் மூலம், நியூயார்க், நியூ ஜெர்சி, வாஷிங்டன் டிசி, சிக்காகோ, சான் பிரான்சிஸ்கோ, வான்கூவர் போன்ற நகரங்களுக்கு எளிமையான விமான சேவை வழங்கப்பட உள்ளது. அமெரிக்கா, மெக்சிகோ, கனடா ஆகிய நாடுகளை இணைக்கும் வகையில் இந்த விமான சேவை திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக, ஏர் இந்தியா தளம் மூலம் பயணிகள் முன்பதிவு செய்யும் வசதி கொண்டுவரப்பட்டுள்ளது. அதே சமயத்தில், அலாஸ்கா ஏர்லைன்ஸ் தளத்தில் ஏர் இந்தியா விமான முன்பதிவுகளை மேற்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.