பாதுகாப்பு விதிமீறல் - ஏர் இந்தியாவுக்கு 1.1 கோடி அபராதம்

January 24, 2024

பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு 1.1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தேசிய விமான போக்குவரத்து இயக்குனரகம் இந்த அபராதத்தை விதித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், நீண்ட தூர விமான பயணங்களின் பொது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை ஏர் இந்தியா விமான நிறுவனம் முறையாக பின்பற்றவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதை அடுத்து […]

பாதுகாப்பு விதிமுறைகளை முறையாக பின்பற்றாத காரணத்தால் ஏர் இந்தியா விமான நிறுவனத்துக்கு 1.1 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தேசிய விமான போக்குவரத்து இயக்குனரகம் இந்த அபராதத்தை விதித்துள்ளது.

கடந்த சில மாதங்களாகவே ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில், நீண்ட தூர விமான பயணங்களின் பொது பின்பற்ற வேண்டிய பாதுகாப்பு விதிமுறைகளை ஏர் இந்தியா விமான நிறுவனம் முறையாக பின்பற்றவில்லை என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதை அடுத்து தேசிய விமான போக்குவரத்து இயக்குனரகம் 1.1 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. ஏர் இந்தியா முன்னாள் விமானி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. முன்னதாக, இதே காரணங்களுக்காக, இண்டிகோ நிறுவனத்துக்கு 1.2 கோடி அபராதம் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu