ஏவுகணை தாக்குதல் காரணமாக ஏர் இந்தியா விமானம் ரத்து

இஸ்ரேல் விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் காரணமாக ஏர் இந்தியா விமானம் திருப்பி அனுப்பப்பட்டது. இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. போர் நிறைவு பெற பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடர்கின்றனர். இந்நிலையில், இஸ்ரேலின் முக்கியமான விமான நிலையம் மீது ஏமனை சேர்ந்த ஹவுதி பயங்கரவாத அமைப்பு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி தாக்கியுள்ளது. இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும், சாலைகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. […]

இஸ்ரேல் விமான நிலையம் மீது ஏவுகணை தாக்குதல் காரணமாக ஏர் இந்தியா விமானம் திருப்பி அனுப்பப்பட்டது.

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் இரண்டு ஆண்டுகளை நெருங்கிக் கொண்டிருக்கிறது. போர் நிறைவு பெற பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வந்தாலும், இரு தரப்பினரும் தாக்குதல்களை தொடர்கின்றனர். இந்நிலையில், இஸ்ரேலின் முக்கியமான விமான நிலையம் மீது ஏமனை சேர்ந்த ஹவுதி பயங்கரவாத அமைப்பு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி தாக்கியுள்ளது.

இந்த தாக்குதலில் உயிரிழப்புகள் ஏற்படவில்லை என்றாலும், சாலைகள் மற்றும் வாகனங்கள் சேதமடைந்துள்ளன. ஹவுதி ஏவுகணையை அழிக்க இஸ்ரேலிய ராணுவம் முயற்சித்தாலும், அதில் வெற்றி பெற முடியாமல் போனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இதுகுறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, டெல் அவிவ் விமான நிலையத்தில் தரையிறங்க தயாராக இருந்த ஏர் இந்தியா விமானம், பாதுகாப்பு காரணங்களுக்காக கடைசி நேரத்தில் அபுதாபிக்கு திருப்பிவிடப்பட்டது. டெல் அவிவ் – டெல்லி விமான சேவையும் ரத்து செய்யப்பட்டுள்ளது என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu