ஏர் இந்தியா நிறுவனம் 500 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டிருப்பதாக டாடா குழும அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏர் இந்தியா நிறுவனத்தை கடந்த ஜனவரி மாதம் டாடா குழுமம் ஒன்றிய அரசிடம் இருந்து வாங்கியது. விமானங்களின் சேவையை அதிகரிக்க அவற்றின் எண்ணிக்கையை உயர்த்துவதற்கு ஏர் இந்தியா திட்டமிட்டுள்ளது.
அதன்படி, 400 சிறிய விமானங்கள் மற்றும் 100 பெரிய விமானங்கள் என மொத்தம் 500 புதிய விமானங்களை வாங்க திட்டமிட்டுள்ளது. இதில் ஏர்பஸ் ஏ-350, போயிங் 737, போயிங்-777 உள்ளிட்ட விமானங்கள் புதிதாக வாங்கப்பட உள்ளன. இதன் மூலம், நாட்டின் மிகப் பெரிய விமான சேவை வழங்கும் நிறுவனமாக டாடா குழுமம் உருவெடுத்துள்ளது.














