470 போயிங், ஏர்பஸ் விமானங்களை வாங்கும் ஏர் இந்தியா

June 21, 2023

டாடா குழுமத்தைச் சேர்ந்த ஏர் இந்தியா விமான நிறுவனம், 470 விமானங்களை புதிதாக வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஏர் பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களும், போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களும் வாங்கப்பட உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 70 பில்லியன் டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம், 500 விமானங்களை வாங்க உள்ளதாக அறிவித்த அடுத்த நாளில் ஏர் இந்தியாவின் அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஏர் இந்தியா நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு […]

டாடா குழுமத்தைச் சேர்ந்த ஏர் இந்தியா விமான நிறுவனம், 470 விமானங்களை புதிதாக வாங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஏர் பஸ் நிறுவனத்திடம் இருந்து 250 விமானங்களும், போயிங் நிறுவனத்திடம் இருந்து 220 விமானங்களும் வாங்கப்பட உள்ளன. இவற்றின் மொத்த மதிப்பு 70 பில்லியன் டாலர்களாக சொல்லப்பட்டுள்ளது. இண்டிகோ நிறுவனம், 500 விமானங்களை வாங்க உள்ளதாக அறிவித்த அடுத்த நாளில் ஏர் இந்தியாவின் அறிவிப்பு வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ஏர் இந்தியா நிறுவனத்தின் நீண்ட கால வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்கு இந்த விமான கொள்முதல் முக்கியமானதாக இருக்கும் என்று ஏர் இந்தியா தலைமை செயல் அதிகாரி கேம்பல் வில்சன் தெரிவித்துள்ளார். பாரிசில் நடைபெற்ற விமான கண்காட்சியில், ஏர்பஸ் நிறுவனத்துடனும், போயிங் நிறுவனத்துடனும், புதிய விமானங்களுக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு உள்ளதாக தனது ட்விட்டர் பதிவில் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu