இஸ்ரேல் ஹமாஸ் இடையே தீவிர போர் நடைபெற்று வருகிறது. இதனால் ஏர் இந்தியா விமானம் தனது சேவையை அக்டோபர் 18 ஆம் தேதி வரை ரத்து செய்துள்ளது.
இஸ்ரேல் மீது ஹமாஸ் தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இதில் போரின் 7வது நாள் வரை 3000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில் இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க ஆபரேஷன் அஜய் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி இஸ்ரேலில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் தனி விமானம் மூலம் இந்தியா அழைத்து வரபடுகின்றனர். மேலும் இஸ்ரேல் போர் காரணமாக அக்டோபர் 18ஆம் தேதி வரை அனைத்து விமான சேவைகளையும் ஏர் இந்திய நிறுவனம் ரத்து செய்துள்ளதாக அறிவித்துள்ளது.