ஏர் இந்தியா விமானங்களில் பிரீமியம் எகானமி வகுப்பு அறிமுகம்

November 21, 2022

ஏர் இந்தியா விமான நிறுவனம், பெரிய அளவிலான சர்வதேச விமானங்களில் ‘பிரீமியம் எகானமி’ வகுப்பை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கேம்பெல் வில்சன் இந்த அறிவிப்பை வெளியிட்டார். தொடர்ந்து பேசிய அவர், “ஏர் இந்தியா விமான நிறுவனத்தை மீட்டெடுப்பதற்காக, நீண்ட கால மற்றும் குறுகிய காலத் திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. குறுகிய கால திட்டங்களாக, விமானங்களின் தரை விரிப்புகள், ஜன்னல் திரைகள், இருக்கைகள் மற்றும் அவற்றின் உரைகளை மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும். சர்வதேச விமானங்களில் […]

ஏர் இந்தியா விமான நிறுவனம், பெரிய அளவிலான சர்வதேச விமானங்களில் ‘பிரீமியம் எகானமி’ வகுப்பை அறிமுகம் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கேம்பெல் வில்சன் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஏர் இந்தியா விமான நிறுவனத்தை மீட்டெடுப்பதற்காக, நீண்ட கால மற்றும் குறுகிய காலத் திட்டங்கள் வரையறுக்கப்பட்டுள்ளன. குறுகிய கால திட்டங்களாக, விமானங்களின் தரை விரிப்புகள், ஜன்னல் திரைகள், இருக்கைகள் மற்றும் அவற்றின் உரைகளை மாற்றும் பணிகள் மேற்கொள்ளப்படும். சர்வதேச விமானங்களில் பிரீமியம் எகானமி பிரிவு உருவாக்கப்படும். நீண்ட கால திட்டமாக, விமானங்களின் பாகங்களை சுயமாக தயாரித்துக் கொள்ள, டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்துடன் இணைந்து செயல்பட முடிவெடுக்கப்பட்டுள்ளது” என்று கூறினார். மேலும், உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான போக்குவரத்தில் 30% இடத்தை கைப்பற்றுவது நிறுவனத்தின் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu