ஏர் இந்தியாவின் 3 பணியிடங்கள் இனிமேல் ஏர் ஏசியாவால் இயக்கப்படும் - அறிவிப்பு

February 8, 2023

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 3 உள்நாட்டு பணியிடங்கள் இனிமேல் ஏர் ஏசியா நிறுவனத்தால் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த இரு விமான நிறுவனங்களுமே டாடா குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், விமான வழித்தடங்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏர் ஏசியா நிறுவனம், இந்தியாவில், 19 இடங்களில் போக்குவரத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், புவனேஸ்வர், பாக்தோக்ரா மற்றும் சூரத் ஆகிய பணியிடங்கள் இனிமேல் ஏர் ஏசியாவால் இயக்கப்படும் […]

ஏர் இந்தியா விமான நிறுவனத்தின் 3 உள்நாட்டு பணியிடங்கள் இனிமேல் ஏர் ஏசியா நிறுவனத்தால் இயக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த இரு விமான நிறுவனங்களுமே டாடா குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. மேலும், விமான வழித்தடங்களை மேம்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் ஏசியா நிறுவனம், இந்தியாவில், 19 இடங்களில் போக்குவரத்தை செயல்படுத்தி வருகிறது. இந்நிலையில், புவனேஸ்வர், பாக்தோக்ரா மற்றும் சூரத் ஆகிய பணியிடங்கள் இனிமேல் ஏர் ஏசியாவால் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், டெல்லி - விசாகப்பட்டினம் மற்றும் மும்பை - லக்னோ வழித்தடங்கள், விதிவிலக்காக எப்போதுமே ஏர் இந்தியா நிறுவனத்தால் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பிப்ரவரி 13ஆம் தேதி முதல், டெல்லி - சென்னை, ஹைதராபாத் - பெங்களூரு, மும்பை - சென்னை மற்றும் கொல்கத்தா - பெங்களூரு வழித்தடங்களில் கூடுதல் விமானங்களை இயக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu