டெல்லியில் இதுவரை காணாத அளவுக்கு காற்று மாசுபாடு அதிகரித்து வருகிறது.
தலைநகர் டெல்லியில் கடந்த 28ஆம் தேதி முதல் காற்று மாசுபாடு காணப்பட்டு வருகிறது. இது தீபாவளிக்கு முன்னர் ஓரளவு குறைந்த நிலையில் தீபாவளி பண்டிகையின் போது வெடித்த பட்டாசின் காரணமாக மீண்டும் அதிகரித்துள்ளது. மேலும் காற்றின் தரம் குறைந்து நகரம் முழுவதும் மூடுபனி ஆக்கிரமிப்பது போல் காணப்பட்டு வருகிறது. இதனால் குழந்தைகள், ஆஸ்துமா நோயாளிகள் உட்பட்ட பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர். நேற்று மதியம் மத்திய அரசின் ஷாபார் செயலியின் படி டெல்லியின் காற்று தர குறியீடு 445 ஆக இருந்து வருகிறது. மேலும் சில இடங்களில் 520க்கு மேல் பதிவாகியுள்ளது. தடையை மீறி பட்டாசு வெடிக்கப்பட்டதே இதன் மோசமான சூழ்நிலைக்கு காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்கள் அதிக அளவில் செல்வதால் காற்று மாசு ஏற்பட்டு வருகிறது. எனவே அத்தியாவசிய பொருட்களை ஏற்றி செல்லும் வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. உலக அளவில் காற்று மாசுபாடு பட்டியலில் டெல்லி முதல் இடத்தை பெற்று உள்ளது. மேலும் மும்பை ஆறாவது இடத்தையும் ஏழாவது இடத்தில் கொல்கத்தாவும் உள்ளது.














