அக்டோபர் முதல் சேலம் விமான நிலையத்திலிருந்து மீண்டும் விமான சேவை தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சேலத்தில் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு விமான சேவை தொடங்கப்பட்டது. இது மத்திய அரசின் உதய் திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்ட நிலையில் சரியான வரவேற்பு இல்லாததால் அவை நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தற்போது மீண்டும் தொழிலதிபர்கள், அரசியல் பிரமுகர்கள் உட்பட பல்வேறு தரப்பினர்களின் கோரிக்கை வைத்ததை அடுத்து சேலத்தில் இருந்து விமானங்கள் இயக்க முடிவெடுக்கப்பட்டுள்ளது. அதன்படி அக்டோபர் 16ஆம் தேதி முதல் விமானங்கள் மீண்டும் இயக்கப்பட இருக்கின்றன. சேலம் காமலாபுரம் விமான நிலையத்திற்கு பெங்களூரில் இருந்தும், சேலத்தில் இருந்து கொச்சிக்கும் ஏர்லைன்ஸ் நிறுவனம் விமான சேவையை தொடங்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. அதேபோல் சேலத்தில் இருந்து சென்னை வழியாக ஹைதராபாத்திற்கு இண்டிகோ நிறுவன விமான சேவை அக்டோபர் மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது.