வெளிநாட்டில் இருந்து இந்தியா வரும் விமான பயணிகள் இனி ஏர் சுவிதா படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டிய அவசியமில்லை என ஒன்றிய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் கடந்த ஆண்டு கொரோனா பரவல் அதிகரித்ததைத் தொடர்ந்து, வெளிநாட்டில் இருந்து வரும் அனைத்து பயணிகளும் கொரோனா தடுப்பூசி செலுத்தியது மற்றும் கொரோனா பரிசோதனை செய்து கொண்டதற்கான சுய அறிவிப்பு படிவமான ‘ஏர் சுவிதா’ தளத்தில் உள்ள படிவத்தை பூர்த்தி செய்து வழங்குதல் கட்டாயமாக்கப்பட்டது.
இந்நிலையில், தற்போது இந்தியாவில் கொரோனா தொற்று முற்றிலும் குறைந்து விட்டது. இதனால் வெளிநாட்டு பயணிகளுக்கான ‘ஏர் சுவிதா’ நடைமுறை தேவையில்லை என ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சகம் நேற்று அறிவித்துள்ளது. இந்த நடைமுறை தேவைப்படும் பட்சத்தில் மீண்டும் மறுபரிசீலனை செய்யப்படலாம் என்றும் அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.