சென்னையில் இருந்து அயோத்தி, காசி, கயாவுக்கு விமான சுற்றுலாவை இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.
ஐ.ஆர்.சி.டி.சி., என்ற இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம், சென்னையில் இருந்து அயோத்தி, காசி, கயாவுக்கு விமான சுற்றுலாவை ஏற்பாடு செய்துள்ளது. சென்னையில் இருந்து டிச.,18ல் புறப்படும் வகையிலான ஐந்து நாள் விமான சுற்றுலாவில், ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வர், புரி, கோனார்க், ஜெகன்னாதர் கோவில்கள் மற்றும் சில்கா ஏரியை காணலாம். இதில் ஒருவருக்கு 34, 500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
சென்னையில் இருந்து அடுத்த ஆண்டு ஜன., 16ல் புறப்படும் வகையிலான ஏழு நாள் சுற்றுலாவில், உத்தரபிரதேச மாநிலம் அயோத்தி, காசி, அலகாபாத், பீஹார் மாநிலம் கயாவுக்கு செல்லலாம். இதில் ஒருவருக்கு 39,500 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. மேலும் விபரங்களுக்கு 90031 40682, 82879 31977 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.