விமானம் தாங்கி போர் கப்பல் 'விக்ராந்த்' ; பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணித்தார்

September 2, 2022

'விக்ராந்த்' விமானம் தாங்கி போர் கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். விக்ராந்த் என்ற பிரமாண்ட விமானம் தாங்கி போர் கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இதனை இந்திய கடற்படைக்கு சொந்தமான, 'வார்ஷிப் டிசைன் பீரோ' என்ற நிறுவனம் வடிவமைத்தது. கொச்சியில் உள்ள அரசு பொதுத் துறை நிறுவனமான, 'கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்' இந்த கப்பலை உருவாக்கியது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களால் இந்த கப்பல் உருவாக்கப்பட்டது. இந்தக் கப்பல் 20 […]

'விக்ராந்த்' விமானம் தாங்கி போர் கப்பலை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

விக்ராந்த் என்ற பிரமாண்ட விமானம் தாங்கி போர் கப்பல் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டது. இதனை இந்திய கடற்படைக்கு சொந்தமான, 'வார்ஷிப் டிசைன் பீரோ' என்ற நிறுவனம் வடிவமைத்தது. கொச்சியில் உள்ள அரசு பொதுத் துறை நிறுவனமான, 'கொச்சி ஷிப்யார்ட் லிமிடெட்' இந்த கப்பலை உருவாக்கியது. முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களால் இந்த கப்பல் உருவாக்கப்பட்டது.

இந்தக் கப்பல் 20 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும், இது 860 அடி நீளமும், 203 அடி அகலமும் உடையது. 4.30 கோடி கிலோ எடையை சுமக்கும் திறன் உடையது. மணிக்கு 56 கி.மீ., வேகத்தில் பயணிக்கக் கூடியது. 2,200 பிரிவுகளுடன், 1,600 வீரர்கள் பயணிக்க கூடிய வகையில் இந்த கப்பல் வடிவைமைக்கப்பட்டது.

இந்த கப்பல், பெண் வீராங்கனையருக்கான பிரத்யேக வசதிகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது. உயர்தர மருத்துவமனையில் இருக்கக் கூடிய அனைத்து வசதிகளும் இடம்பெற்று உள்ளன. சமீபத்திய நவீன மருத்துவ உபகரணங்கள், 'பிசியோதெரபி' பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, பரிசோதனை கூடங்கள் ஆகியவை உள்ளன.

இந்த விமானம் தாங்கி போர்க்கப்பல், 'மிக்29கே' ரக போர் விமானங்கள், 'கமோவ் 31, எம்.எச்.,60ஆர்' ரக ஹெலிகாப்டர்கள், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நவீன இலகுரக ஹெலிகாப்டர்கள், இலகுரக விமானங்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கும் வசதிகளை கொண்டுள்ளது.

இதன் மூலம், உள்நாட்டில் விமானம் தாங்கி போர் கப்பலை வடிவமைத்து உருவாக்குவதற்கான திறனை உடைய அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா, பிரான்ஸ் போன்ற தேர்ந்தெடுக்கப்பட்ட நாடுகளின் குழுவில் இந்தியாவும் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu