கோடை விடுமுறைக்கு விமான கட்டணம் கடும் உயர்வு

March 24, 2023

கோடை விடுமுறைக்கு சுற்றுலா தலங்களுக்கு பயணங்கள் அதிகரித்துள்ளதால் விமான கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது. கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளிநாடுகள் மற்றும் வெளி ஊர்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மே மாதத்தில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு விமான டிக்கெட் முன்பதிவு அதிகரித்து இருக்கிறது. சென்னையில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஸ்ரீலங்கா, ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு செல்ல முன்பதிவு அதிகரிக்க வாய்ப்புள்ளது. மேலும் இந்த நாடுகளில் இருந்து சென்னை […]

கோடை விடுமுறைக்கு சுற்றுலா தலங்களுக்கு பயணங்கள் அதிகரித்துள்ளதால் விமான கட்டணம் கடுமையாக உயர்ந்துள்ளது.

கோடை விடுமுறையை முன்னிட்டு சென்னையில் இருந்து வெளிநாடுகள் மற்றும் வெளி ஊர்களுக்கு சுற்றுலா செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மே மாதத்தில் வெளிநாடுகளுக்கு செல்வதற்கு விமான டிக்கெட் முன்பதிவு அதிகரித்து இருக்கிறது. சென்னையில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளான மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து ஸ்ரீலங்கா, ஹாங்காங் போன்ற நாடுகளுக்கு செல்ல முன்பதிவு அதிகரிக்க வாய்ப்புள்ளது.

மேலும் இந்த நாடுகளில் இருந்து சென்னை வருவதற்கு சுமார் ரூ.30,000 முதல் ரூ.40,000 வரையும், மத்திய கிழக்கு நாடுகளான ஈரான், ஈராக், பக்ரைன், சவுதி அரேபியா ஆகிய நாடுகளுக்கு ரூ.20,000 முதல் ரூ. 30,000 வரை கட்டணம் உயர்ந்துள்ளது. மே மாதத்தில் சென்னையில் இருந்து ஸ்ரீ நகர் வழியாக டெல்லி செல்ல ஒரு வழி கட்டணம் ரூ.13,000 முதல் ரூ. 18,000 வரை உயர்ந்து உள்ளது. மேலும், சென்னையில் இருந்து அந்தமான் செல்ல ரூ. 8,000 முதல் ரூ. 10,000 வரை விமான கட்டணம் அதிகரித்து இருக்கிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu