விமான தாமதத்திற்காக, ஜப்பானுக்கு நேரில் சென்று பயணிகளிடம் மன்னிப்பு கேட்ட தைவான் விமான நிறுவனத் தலைவர்

May 17, 2023

தைவானிலிருந்து ஜப்பானுக்கு செல்ல வேண்டிய ஸ்டார்லக்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, கடந்த வாரம் 15 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது. மோசமான வானிலை மற்றும் பராமரிப்பில் ஏற்பட்ட குறைபாடு போன்ற காரணங்களுக்காக இந்த தாமதம் ஏற்பட்டது. இந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகள், உணவு இல்லாமலும், உறக்கம் இல்லாமலும் விமான நிலையத்திலேயே தவித்து வந்தனர். மதியம் 3:45 மணிக்கு கிளம்ப இருந்த விமானம், மறுநாள் அதிகாலை 6:00 மணி அளவில் புறப்பட்டது மற்றும் பயணிகள் தவிக்க […]

தைவானிலிருந்து ஜப்பானுக்கு செல்ல வேண்டிய ஸ்டார்லக்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்று, கடந்த வாரம் 15 மணி நேரம் தாமதமாக புறப்பட்டு சென்றுள்ளது. மோசமான வானிலை மற்றும் பராமரிப்பில் ஏற்பட்ட குறைபாடு போன்ற காரணங்களுக்காக இந்த தாமதம் ஏற்பட்டது. இந்த விமானத்தில் பயணிக்க இருந்த பயணிகள், உணவு இல்லாமலும், உறக்கம் இல்லாமலும்
விமான நிலையத்திலேயே தவித்து வந்தனர். மதியம் 3:45 மணிக்கு கிளம்ப இருந்த விமானம், மறுநாள் அதிகாலை 6:00 மணி அளவில் புறப்பட்டது மற்றும் பயணிகள் தவிக்க விடப்பட்டது தைவான் நாட்டு ஊடகங்களில் வெளியானது.

இந்நிலையில், ஸ்டார்லக்ஸ் ஏர்லைன்ஸ் விமான நிறுவனத்தின் தலைவர் சாங் குயோவே ஜப்பானுக்கு நேரில் சென்று மன்னிப்பு கேட்டுள்ளார். மேலும், "புயல் காரணமாக முதல் விமானமும், விமான பராமரிப்பு காரணமாக இரண்டாவது விமானமும் தாமதமானது. இதனால் பாதிக்கப்பட்ட பயணிகளிடம் மன்னிப்பு கேட்கிறேன். அத்துடன், பயண கட்டணம் முழுமையாக திருப்பி செலுத்தப்படும்" என்று கூறியுள்ளார். இந்த செய்தி இணையத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu