பிபோர்ஜோய் புயல் காரணமாக மும்பையில் விமான சேவை பாதிப்பு

குஜராத் கடலை நோக்கி வரும் பிபோர்ஜோய் தீவிர புயல் காரணமாக மும்பையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது. பிபோர்ஜோய் புயல் தீவிர சூறாவளி புயலாக மாறியதைத் தொடர்ந்து மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இதுகுறித்து ஏர் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மோசமான வானிலை மற்றும் மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டதால், எங்கள் சில விமானங்கள் தாமதம் மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சூறாவளியின் தீவிரம் அதிகரித்ததால், பலத்த […]

குஜராத் கடலை நோக்கி வரும் பிபோர்ஜோய் தீவிர புயல் காரணமாக மும்பையில் விமான சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

பிபோர்ஜோய் புயல் தீவிர சூறாவளி புயலாக மாறியதைத் தொடர்ந்து மும்பையில் கனமழை பெய்து வருகிறது. இதுகுறித்து ஏர் இந்தியா அறிக்கை வெளியிட்டுள்ளது. அதில், மோசமான வானிலை மற்றும் மும்பை விமான நிலையத்தில் ஓடுபாதை தற்காலிகமாக மூடப்பட்டதால், எங்கள் சில விமானங்கள் தாமதம் மற்றும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பை மற்றும் மகாராஷ்டிராவின் பல்வேறு பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை சூறாவளியின் தீவிரம் அதிகரித்ததால், பலத்த காற்று வீசியது. காற்றின் தரம் மற்றும் தெரிவுநிலையையும் பலத்த காற்று பாதித்தது. காற்று பலமாக வீசுவதால் மும்பையில் இருந்து வெளியூருக்கு செல்ல இருந்த பல ஏர் இந்தியா விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu