ஐக்கிய அரபு நாடுகளில் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக சென்னையில் இருந்து அந்நாடுகளுக்கு இயக்கப்படும் ஐந்து விமானங்கள் ரத்து செய்யப்படுகிறது.
கடந்த இரண்டு நாட்களாக ஐக்கிய அரபு நாடுகளான ஷார்ஜா, அபுதாபி, துபாய் உள்ளிட்ட நகரங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர் தேங்கியுள்ளது. சாலையில் நிறுத்தப்பட்ட வாகனங்கள் நீரில் அடித்து செல்லப்படுகிறது. மேலும் துபாய் விமான நிலையத்தின் சேவை முற்றிலுமாக முடங்கியுள்ளது. அமீரகம் முழுவதும் பள்ளிகள் மூடப்பட்டுள்ளன அரசு ஊழியர்கள் வீட்டில் இருந்தபடியே பணி செய்கின்றனர். துபாய்க்கு வரக்கூடிய எண்ணற்ற விமானங்கள் ரத்து செய்யப்பட்டும். காலத் தாமதுத்துடனும் இயங்கின.
இந்நிலையில், சென்னையில் இருந்து அமீரக நாட்டுக்கு இயக்கப்படும் ஐந்து விமானங்கள் மற்றும் அங்கிருந்து சென்னைக்கு வர வேண்டிய ஐந்து விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.














