அந்தமானில் அமைந்துள்ள வீர சாவர்க்கர் சர்வதேச விமான நிலையத்தை காணொளி காட்சி மூலம் பிரதமர் மோடி இன்று திறந்து வைக்க உள்ளார்.
அந்தமான், நிக்கோபார் யூனியன் பிரதேசத்தின் தலைநகர் போர்ட் பிளேயரில் கடந்த 2019 ஆம் ஆண்டு புதிய பன்னாட்டு ஒருங்கிணைந்த விமான முனையம் 707 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட பணிகள் தொடங்கின. கொரோனா தொற்று காரணமாக கட்டுமான பணிகளில் தாமதம் ஏற்பட்டு வந்தது.
தற்போது இதன் பணிகள் முழுமையாக நிறைவடைந்தது. இந்த புதிய முனையம் ஒரே நேரத்தில் 10 விமானங்களை நிறுத்தும் வகையில் கட்டப்பட்டுள்ளது. மேலும் ஆண்டுக்கு 50 லட்சம் பயணிகளை கையாளும் திறனை கொண்டுள்ளது. மேலும் இது சிற்பி வடிவில் கடலையும் இயற்கையும் பிரதிபலிக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இரட்டை அடுக்கு மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வெப்பம் குறையும். மேலும் மின்விளக்கின் பயன்பாடு குறைந்து மின்சாரமும் சேமிப்பாகும். இந்தஒருங்கிணைந்த வீர சாவர்க்கர் பன்னாட்டு விமான நிலையத்தை பிரதமர் மோடி இன்று காணொளி காட்சி வாயிலாக திறந்து வைக்கிறார்.