2023 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் கூட்டத் தொடருக்கு முன்பாக, இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் 20000 கோடி ரூபாய் வரை நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது. அமைச்சகத்தின் வசம் உள்ள சொத்துக்களை பணமாக்குவதன் மூலமும், விமானப் போக்குவரத்து துறையில் தனியார் முதலீடுகளை வரவேற்பதன் மூலமும் இந்த நிதி திரட்டப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பட்ஜெட் கூட்டத்தில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.
இதன் பகுதியாக, சுமார் 12 விமான நிலையங்களை தனியார் மயமாக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த பட்டியலில், ராய்ப்பூர், ஜெய்ப்பூர், விஜயவாடா, கொல்கத்தா, இந்தூர் போன்ற முக்கிய விமான நிலையங்கள் இடம் பெற்றுள்ளன. இதன் மூலமாக மட்டுமே 8000 கோடி ரூபாய் நிதி திரட்டப்பட உள்ளது. இந்நிலையில், விமான நிலையங்களை தனியார்மயம் ஆக்குவது குறித்து விமர்சனங்கள் எழுந்துள்ளன.














