இந்தியாவின் துல்லியமான தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தான் வான்வெளியை இந்திய விமானங்களுக்கு தடை செய்துள்ளது; இந்தியாவும் பதிலடி நடவடிக்கையாக பாகிஸ்தான் விமானங்களை தடுத்து வருகிறது.
பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலுக்குப் பதிலாக, இந்தியா "ஆபரேஷன் சிந்தூர்" என்ற பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையை மேற்கொண்டு, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் செயல்பட்டு வந்த 9 பயங்கரவாத முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது. இந்த தாக்குதலால் இரு நாடுகளுக்குமிடையே போர் சூழ்நிலை உருவானது. இதனையடுத்து, பாகிஸ்தான் அரசு, இந்தியா சார்ந்த அல்லது இந்தியா மூலம் இயக்கப்படும் பயணிகள் மற்றும் ராணுவ விமானங்கள் தங்களது வான்வெளியை பயன்படுத்தும் செயலுக்கு தடைவிதித்தது. இத்தடை ஆகஸ்ட் 25, காலை 5.19 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என பாகிஸ்தான் விமான போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது. இதற்குப் பதிலாக, இந்திய அரசும் ஏப்ரல் 30ஆம் தேதி முதல் பாகிஸ்தானின் விமானங்களுக்கு இந்திய வான்வெளியை பயன்படுத்த தடை விதித்துள்ளது. பாகிஸ்தான் இந்தத் தடை நடவடிக்கையை ஏப்ரல் 24ஆம் தேதியிலேயே அறிவித்திருந்தது.