ஏர்டெல் 5ஜி பிளஸ் - இந்தியாவின் அனைத்து வடகிழக்கு மாநிலங்களிலும் அறிமுகம்

February 15, 2023

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் தனது 5ஜி இணைய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 5ஜி பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை, ஏற்கனவே உள்ள டேட்டா பிளான்கள் இந்த மாநிலங்களில் தொடரப்படும் என்று தெரிவித்துள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் படி, கொஹிமா, திமாபூர், ஐஸ்வால், கேங்டாக், சிலுச்சர், திப்ருகார்ஹ், திண்சுக்கியா பகுதிகளில் ஏர்டெல் 5ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கௌஹாத்தி, ஷில்லாங், இம்பால், அகர்தலா, இட்டாநகர் பகுதிகளில் ஏர்டெல் 5ஜி சேவை […]

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் அனைத்திலும் தனது 5ஜி இணைய சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும், 5ஜி பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை, ஏற்கனவே உள்ள டேட்டா பிளான்கள் இந்த மாநிலங்களில் தொடரப்படும் என்று தெரிவித்துள்ளது. நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல் படி, கொஹிமா, திமாபூர், ஐஸ்வால், கேங்டாக், சிலுச்சர், திப்ருகார்ஹ், திண்சுக்கியா பகுதிகளில் ஏர்டெல் 5ஜி சேவை வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, கௌஹாத்தி, ஷில்லாங், இம்பால், அகர்தலா, இட்டாநகர் பகுதிகளில் ஏர்டெல் 5ஜி சேவை உள்ளது குறிப்பிடத்தக்கது.

வட கிழக்கு மாநில மக்கள் தற்போது 20 முதல் 30 மடங்கு வேகமான இணைய சேவையைப் பெறுவர் என்று ஏர்டெல் நிறுவனத்தின் வடகிழக்கு மாநிலங்கள் தலைமை அதிகாரி ரஜினிஷ் வர்மா தெரிவித்துள்ளார். மேலும், பல்வேறு கட்டங்களாக இந்த சேவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu