நடப்பு நிதி ஆண்டின் இரண்டாம் காலாண்டில், Revenue Market Share (RMS) எனப்படும் வருவாய் சந்தை பங்கு அடிப்படையில், ஜியோ நிறுவனத்தை ஏர்டெல் நிறுவனம் முந்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வோடபோன் நிறுவனம் தொடர்ந்து இழப்பை பதிவு செய்துள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
ட்ராய் அமைப்பின் தரவுகள் படி, கடந்த காலாண்டில், ஏர்டெல் நிறுவனத்தின் ஆர்எம்எஸ் 83 அடிப்படை புள்ளிகள் உயர்ந்து, 36.3% ஆக பதிவாகியுள்ளது. அதே வேளையில், ஜியோ நிறுவனத்தின் ஆர்எம்எஸ் 56 புள்ளிகள் உயர்ந்து, 41.4% ஆகவும், வோடபோன் நிறுவனத்தின் ஆர்எம்எஸ் 20 புள்ளிகள் குறைந்து, 17.5% ஆகவும் பதிவாகியுள்ளது. பார்தி ஏர்டெல் நிறுவனம், நகர்ப்புறங்களில் நல்ல முறையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகவும், சிறப்பான திட்டங்கள் மூலம் தனது இணைய சேவையை பணமாக மாற்றி உள்ளதாகவும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.