ஏர்டெல் நிறுவனம் இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தில் 49% பங்கு பங்களிப்பை கொண்டுள்ளது. இதனை மேலும் 3% அளவுக்கு உயர்த்த திட்டமிட்டு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக அண்மை தகவல் கிடைத்துள்ளது.
ஏர்டெல் நிறுவனம், இண்டஸ் டவர்ஸ் பங்குகளை கைப்பற்றி, அதனை Nxtra டேட்டா சென்டர் வர்த்தகத்துடன் இணைக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் வந்துள்ளது. முன்னதாக, வோடபோன் நிறுவனம் இண்டஸ் டவர்ஸ் நிறுவனத்தில் தனக்கிருந்த 18% பங்குகளை விற்பனை செய்தது. அதில் 1% பங்குகளை வாங்கிய ஏர்டெல், தற்போது 49% பங்கு பங்களிப்பை கொண்டுள்ளது. இது 52% ஆக உயரும் பட்சத்தில், இண்டஸ் டவர்ஸ், ஏர்டெல், Nxtra ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் பெரிய மாற்றம் ஏற்படும் என நிபுணர்கள் கூறுகிறார்கள்.