ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் 54% உயர்வு

February 6, 2024

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான ஏர்டெல், தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபத்தில் 54% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் 2442.2 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 54% உயர்வாகும். மேலும், கடந்த காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாய் 37899.5 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் […]

இந்தியாவின் மிகப்பெரிய தகவல் தொடர்பு தொழில்நுட்ப நிறுவனமான ஏர்டெல், தனது மூன்றாம் காலாண்டு நிதிநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, நிறுவனத்தின் நிகர லாபத்தில் 54% உயர்வு பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலாண்டில், ஏர்டெல் நிறுவனத்தின் நிகர லாபம் 2442.2 கோடியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில், இது 54% உயர்வாகும். மேலும், கடந்த காலாண்டில், நிறுவனத்தின் ஒருங்கிணைந்த செயல்பாட்டு வருவாய் 37899.5 கோடி ரூபாயாக பதிவாகியுள்ளது. இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.8% உயர்வாகும். மேலும், ஒரு இந்திய வாடிக்கையாளர் மூலம் ஏர்டெல் நிறுவனத்துக்கு கிடைக்கும் சராசரி வருவாய் 208 ரூபாயாக உயர்ந்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 203 ரூபாயாக பதிவானது குறிப்பிடத்தக்கது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu