ஸ்பெயின் நிறுவனம் உருவாக்கிய ஏஐ மாடல்

November 27, 2023

ஸ்பெயினைச் சேர்ந்த ‘தி க்ளுலெஸ்’ என்ற நிறுவனம், ஏஐ மாடல் ஒன்றை உருவாக்கியுள்ளது. மனிதர்களைப் போலவே செயல்படும் இந்த ஏஐ மாடல் உலக கவனம் பெற்றுள்ளது. ‘அய்டானா லோபஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள பெண்பால் மாடலை க்ளுலெஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது நிஜமான பெண் போலவே உள்ளது. இது குறித்து பேசிய நிறுவனத்தின் தோற்றுனர் ரூபன் குரூஸ், “எங்கள் நிறுவனத்துக்கு கிடைக்கும் பிராஜெக்ட்கள் பலமுறை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணமாக, விளம்பர மாடல்கள் இருந்து வந்தனர். இதற்கு தீர்வு […]

ஸ்பெயினைச் சேர்ந்த ‘தி க்ளுலெஸ்’ என்ற நிறுவனம், ஏஐ மாடல் ஒன்றை உருவாக்கியுள்ளது. மனிதர்களைப் போலவே செயல்படும் இந்த ஏஐ மாடல் உலக கவனம் பெற்றுள்ளது.

‘அய்டானா லோபஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள பெண்பால் மாடலை க்ளுலெஸ் நிறுவனம் உருவாக்கியுள்ளது. இது நிஜமான பெண் போலவே உள்ளது. இது குறித்து பேசிய நிறுவனத்தின் தோற்றுனர் ரூபன் குரூஸ், “எங்கள் நிறுவனத்துக்கு கிடைக்கும் பிராஜெக்ட்கள் பலமுறை நிறுத்தப்பட்டுள்ளது. இதற்கான முக்கிய காரணமாக, விளம்பர மாடல்கள் இருந்து வந்தனர். இதற்கு தீர்வு காணும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இந்த மாடலை உருவாக்கியுள்ளோம். இதற்காக, பிரத்யேக குழு பணியாற்றி வந்தது. தனியாக இன்ஸ்டாகிராம் கணக்கு தொடங்கப்பட்டு, அய்டானா லோபஸ் புகைப்படங்கள் தொடர்ச்சியாக பதிவேற்றப்பட்டன. தற்போது இந்த கணக்கை 1.2 லட்சத்துக்கும் அதிகமானோர் பின் தொடர்ந்து வருகின்றனர்.” எனக் கூறினார். செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட இந்த மாடலை மாதிரியாக கொண்டு விளம்பர படங்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஒரு விளம்பர படத்திற்கு 1000 யூரோக்கள் கட்டணமாக நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில், மாதத்திற்கு 2.73 லட்சம் ரூபாய் மதிப்பில் இந்த மாடல் சம்பாதித்து வருகிறது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu