உலக வங்கி தலைவர் மற்றும் அமெரிக்க துணை அதிபர் சந்திப்பு

June 7, 2023

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா, கடந்த வெள்ளிக்கிழமை உலக வங்கியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை திங்கட்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, அதிக அளவில் தனியார் முதலீடுகளை ஈர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இருவரின் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, “பருவநிலை மாற்றம், போர் சூழல், நோய் தொற்று பரவல் உள்ளிட்ட சர்வதேச சவால்களை எதிர்கொண்டு, சிறப்பாக செயல்படும் உலக வங்கிக்கு பாராட்டுக்கள். […]

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அஜய் பங்கா, கடந்த வெள்ளிக்கிழமை உலக வங்கியின் தலைவராக பொறுப்பேற்றுக் கொண்டார். அவர், அமெரிக்க துணை அதிபர் கமலா ஹாரிசை திங்கட்கிழமை சந்தித்தார். இந்த சந்திப்பின் போது, அதிக அளவில் தனியார் முதலீடுகளை ஈர்ப்பது குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இருவரின் சந்திப்பு குறித்து வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி, “பருவநிலை மாற்றம், போர் சூழல், நோய் தொற்று பரவல் உள்ளிட்ட சர்வதேச சவால்களை எதிர்கொண்டு, சிறப்பாக செயல்படும் உலக வங்கிக்கு பாராட்டுக்கள். ஐநாவின் நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகளை அடைய, உலக வங்கி எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா துணை நிற்கும். வளர்ந்து வரும் நாடுகளுக்கு பசுமை எரிசக்தி சார்ந்த திட்டங்களை செயல்படுத்த, உலக வங்கி தேவையான நிதியை வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்படுகிறது. மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதில், அரசு முதலீடுகள் மட்டுமே போதுமானவை அல்ல. எனவே, தனியார் முதலீடுகளை ஈர்க்கும் செயல் திட்டங்கள் வகுக்கப்பட வேண்டும். இதற்காக, உலக வங்கி மற்றும் இதர பங்குதாரர்களுடன் இணைந்து செயல்பட அமெரிக்கா திட்டமிட்டுள்ளது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu