ஆகாஷ் என்.ஜி ஏவுகணை பரிசோதனை வெற்றி

January 12, 2024

இன்று காலை 10:30 மணிக்கு ஆகாஷ் என்.ஜி பரிசோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டது. ஒடிசாவின் சண்டிபூர் கடற்கரையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை எல்லையில் இருந்து ஆகாஷ் என்.ஜி ஏவுகணை இன்று ஏவப்பட்டது. இது நாட்டின் ராணுவ வலிமையை மேலும் அதிகரிக்க உள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை சுமார் 80 கிலோமீட்டர் வரை சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை வான்வெளி தாக்குதலை இடைமறிக்கும் திறன் கொண்ட அமைப்பாக உள்ளது. இன்றைய சோதனையில் […]

இன்று காலை 10:30 மணிக்கு ஆகாஷ் என்.ஜி பரிசோதனை வெற்றிகரமாக செய்யப்பட்டது.

ஒடிசாவின் சண்டிபூர் கடற்கரையில் அமைந்துள்ள ஒருங்கிணைந்த சோதனை எல்லையில் இருந்து ஆகாஷ் என்.ஜி ஏவுகணை இன்று ஏவப்பட்டது. இது நாட்டின் ராணுவ வலிமையை மேலும் அதிகரிக்க உள்ளதாக பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை சுமார் 80 கிலோமீட்டர் வரை சென்று இலக்கை தாக்கும் திறன் கொண்டது. இந்த ஏவுகணை வான்வெளி தாக்குதலை இடைமறிக்கும் திறன் கொண்ட அமைப்பாக உள்ளது. இன்றைய சோதனையில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை வெற்றிகரமாக ஆகாஷ் என். ஜி ஏவுகணை தாக்கி அழித்துள்ளது. இதில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட ரேடியோ அலைவரிசை கண்டறியும் கருவி, லாஞ்சர் ரேடார், கட்டுப்பாடு மற்றும் தொலைத்தொடர்பு அமைப்புகள் ஆகியவை உள்ளன. இந்த ஆகாஷ் என். ஜி சோதனை வெற்றி அடைந்ததை தொடர்ந்து பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்துள்ளார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu