கடந்த 25 ஆண்டுகளாக, கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக இருந்தவர் அக்பர் அல் பக்கீர் ஆவார். அவர், தற்போது தனது பொறுப்பிலிருந்து விலகுகிறார். எனவே, கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக பாதர் முஹம்மது அல் மீர் நியமிக்கப்பட உள்ளார்.
வரும் நவம்பர் 5ம் தேதியுடன், அக்பர் அல் பக்கீர் பதவிக்காலம் நிறைவு பெறுகிறது. உடனடியாக, கத்தார் ஏர்வேஸ் நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் பாதர் முஹம்மது அல் மீர் நியமிக்கப்படுகிறார். அக்பர் அல் பக்கீர் பதவி விலகுவதை முன்னிட்டு, கத்தார் ஏர்வேஸ் நிறுவனம், அவர் ஆற்றிய பணிகளுக்கு நன்றி தெரிவித்துள்ளது. அவரது தலைமையில் கத்தார் ஏர்வேஸ் மிகப்பெரிய உயரங்களை எட்டி உள்ளதாக தெரிவித்துள்ளது.