தெலுங்கானா மாநிலத்தின் தற்காலிக சபாநாயகர் ஆக அக்பருதீன் ஒவைசி பதவியேற்பு

December 9, 2023

தெலுங்கானாவில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தல் காங்கிரஸ் கட்சி 65 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அங்கு முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இதில் தெலுங்கானா முதல்வராக ரேவாந்த் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள எல் பி மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் ரேவந்த் ரெட்டி முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். இவருக்கு […]

தெலுங்கானாவில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது.
தெலுங்கானா மாநிலத்தில் நடந்த சட்டசபை தேர்தல் காங்கிரஸ் கட்சி 65 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றியது. அங்கு முதல் முறையாக காங்கிரஸ் ஆட்சியை பிடித்துள்ளது. இதில் தெலுங்கானா முதல்வராக ரேவாந்த் ரெட்டி தேர்ந்தெடுக்கப்பட்டு ஹைதராபாத்தில் உள்ள எல் பி மைதானத்தில் புதிய மந்திரி சபை பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் ரேவந்த் ரெட்டி முதல் மந்திரியாக பதவி ஏற்றுக்கொண்டார். இவருக்கு கவர்னர் தமிழிசை சௌந்தரராஜன் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். அதன் பின்னர் 20 மந்திரிகள் பதவியேற்றுக்கொண்டனர். அதனை தொடர்ந்து கவர்னர் தமிழிசை தெலுங்கானா சட்டசபையில் தற்காலிக சபாநாயகராக அக்பருதீன் ஒவைசியை அறிவித்தார்.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu