இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அக்ஷதா கிருஷ்ணமூர்த்தி, நாசாவில் கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். அவர் செவ்வாய் கிரக ரோவர் திட்டத்தில் பணியாற்றும் முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.
அக்ஷதா கிருஷ்ணமூர்த்தி, நாசாவின் ரோவர் திட்டத்தில் பணியாற்றுவது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், கடின உழைப்பு இருந்தால் இலக்கை நிச்சயமாக அடையலாம்; எனவே, தடைகளை தகர்த்து இலக்கை நோக்கி பயணிக்க ஊக்குவிக்கும் வகையில் இந்த பதிவை அவர் குறிப்பிட்டுள்ளார். அவர், நாசாவில் பணியாற்றும் முழு நேர இந்தியர்கள் பட்டியலில் மிக முக்கியமானவர் ஆவார். மேலும், மசாசூசெட்ஸ் பல்கலைக்கழகத்தில் தனது ஆராய்ச்சி படிப்பை முடித்துள்ளார். நாசாவில் தனது இலக்கை அடைந்ததை ஒட்டி மகிழ்ச்சி தெரிவித்துள்ள அவருக்கு, பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.