அண்மையில், ரிலையன்ஸ் நிறுவனம் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்தை தனியாக பிரித்தது. தற்போது, அமெரிக்காவின் முன்னணி சொத்து மேலாண்மை நிறுவனமான பிளாக் ராக் உடன் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் கூட்டணியில் இணைய உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. குறிப்பாக, இரு நிறுவனங்களின் 50:50 கூட்டணியில் புதிய நிறுவனம் ஒன்று உருவாக்கப்பட்டு, இந்தியாவில் அஸர்ட் மேனேஜ்மென்ட் வர்த்தகம் மேற்கொள்ள உள்ளதாக ரிலையன்ஸ் அறிவித்துள்ளது.
ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் மற்றும் பிளாக் ராக் நிறுவனங்கள், அசர்ட் மேனேஜ்மென்ட் வர்த்தகத்தில், கிட்டத்தட்ட 2400 கோடி ரூபாய் முதலீடு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிளாக் ராக் நிறுவனத்தின் அலாவுதீன் தளம் ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் உடன் இணைகிறது. இது, ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் நிறுவனத்திற்கு முதுகெலும்பாக இருக்கும். எனவே, ஏற்கனவே 36 லட்சம் வாடிக்கையாளர்களைக் கொண்ட ஜியோ பைனான்சியல் சர்வீசஸ், மேலும் அதிக வலிமையுடன் இந்திய மியூச்சுவல் ஃபண்ட் துறையில் களமிறங்க உள்ளது.














