சர்வதேச அளவில் மிகவும் பிரபலமான சிப்ஸ் நிறுவனமாக ஆலன் பகிள்ஸ் அறியப்படுகிறது. இந்த நிறுவனத்துடன் ரிலையன்ஸ் நிறுவனத்தின் எஃப் எம் சி ஜி பிரிவான ரிலையன்ஸ் ரீடைல் வென்ச்சர்ஸ் லிமிடெட் ஒப்பந்தத்தில் ஈடுபட்டுள்ளது. அதன்படி, ஆலன் பகிள்ஸ் தயாரிப்புகள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. இந்திய மதிப்பில் 10 ரூபாய் முதல் ஆலன் பகிள்ஸ் தயாரிப்புகள் விற்பனை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக, கேரள மாநிலத்தில் விற்பனை தொடங்கப்பட உள்ளது. அதை தொடர்ந்து, இந்தியாவின் மற்ற மாநிலங்களில் சந்தை விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், இந்திய சந்தையில் மேற்கத்திய ஸ்நாக்ஸ் வகைகள் அறிமுகமாகின்றன. மேலும், ரிலையன்ஸ் குழுமத்தின் சந்தை நாடு தழுவிய முறையில் விரிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.