விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அரை இறுதி ஆட்டத்தில் மெத்வதேவை வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறினார் அல்காரஸ்.
லண்டனில் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவு முதல் அரை இறுதி ஆட்டத்தில் ரஷ்ய வீரர் டேனில் மெத்வதெவ் மற்றும் ஸ்பெயின் வீரர் அல்காரஸ் மோதினர். இதில் மெத்வதேவ் 7-6 என முதல் செட்டை வென்றார். இதனை தொடர்ந்து விளையாடிய அல்காரஸ் அடுத்த மூன்று சுற்று ஆட்டங்களை 6-3,6-4,6-4 என்று அல்காரஸ் கைப்பற்றினார். எனவே அல்காரஸ் இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளார்.