விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் அல்காரஸ் காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.
ஆண்டுதோறும் கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற 4 வகையான டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதில் லண்டனில் மிகவும் கவுரவமாக கருதப்படும் விம்பிள்டன் டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றைய பிரிவில் நான்காவது சுற்று ஆட்டத்தில் ஸ்பெயின் வீரர் கார்லோஸ் அல்காரஸ் பிரான்ஸ் வீரர் யூகோ ஹம்பர்ட் உடன் மோதினார். இதில் முதல் இரண்டு செட்டை கைப்பற்றிய அல்காரஸ் மூன்றாவது செட்டில் தோல்வியடைந்தார். பின்னர் நான்காவது செட்டில் மீண்டும் வெற்றி பெற்றார். இறுதியில் அல்காராஸ் 6-3,6-4,1-6,7-5 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.