ஒவ்வொரு ஆண்டும் உலகின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலை டைம்ஸ் இதழ் வெளியிட்டு வருகிறது. அந்த வகையில், 2024 ஆம் ஆண்டுக்கான பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் 8 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.
பல்வேறு துறைகளில் தனித்தன்மையுடன் சாதனை புரிந்தவர்கள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் அதிக செல்வாக்கு கொண்டவர்கள் டைம்ஸ் இதழின் சக்தி வாய்ந்த மனிதர்கள் பட்டியலில் இடம் பெறுவர். இந்த ஆண்டுக்கான பட்டியலில், அஜய் பங்கா (உலக வங்கி தலைவர்), சாக்ஷி மாலிக் (ஒலிம்பிக் பதக்கம் வென்ற மல்யுத்த வீராங்கனை), தேவ் படேல் (நடிகர்) ஆலியா பட் (நடிகை), சத்யா நாதெல்லா (மைக்ரோசாப்ட் தலைவர்), ஜிகர் ஷா (அமெரிக்க அரசு ஊழியர்), பிரியம்வதா நடராஜன் (வானியல் துறை பேராசிரியை), அஸ்மா கான் (உணவக தொழில் அதிபர்) ஆகிய 8 இந்தியர்கள் இடம் பெற்றுள்ளனர்.














