அலிபாபா குழும தோற்றுநர் ஜாக் மா, தனது பங்குகளை குறைக்க திட்டமிட்டு இருந்தார். தற்போது, இந்த நடவடிக்கையில் இருந்து சற்று பின்வாங்கியுள்ளார்.
ஜாக் மா, அலிபாபா குழுமத்தின் 10 மில்லியன் பங்குகளை விற்க திட்டமிட்டு இருந்தார். இதன் மதிப்பு 870 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இவற்றை விற்பனை செய்வதாக ஜாக் மா ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில், இந்த முடிவை நிறுத்தி வைப்பதாக ஜாக் மா அலுவலகம் தெரிவித்துள்ளது. “தற்போதைய நிலையில், அலிபாபா மதிப்பு குறைவாக உள்ளது; எனவே, இந்த நிலையில் பங்கு விற்பனையில் ஈடுபட விரும்பவில்லை. அலிபாபா வர்த்தகம் தொடர்ந்து உயரும் என நம்புவதாகவும்” ஜாக் மா அலுவலக அறிக்கை கூறியுள்ளது.