சீனாவின் அலிபாபா நிறுவனம், ஜோமாட்டோ நிறுவனத்தில் 12.98% பங்குகளை கொண்டுள்ளது. அதில், 200 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள, 3% பங்குகளை, இன்று பிளாக் டீல் மூலம் விற்பனை செய்ய அலிபாபா திட்டமிட்டுள்ளது. சுமார் 5-6% சலுகை விலையில் ஜோமாட்டோ பங்குகளை விற்க அலிபாபா நிறுவனம் திட்டமிட்டுள்ளது. முன்னதாக, கடந்த ஆகஸ்ட் மாதத்தில், ஊபர் நிறுவனம், ஜோமாட்டோவில் இருந்த, 392 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள 7.8% பங்குகளை பிளாக் டீல் மூலம் விற்பனை செய்தது குறிப்பிடத்தக்கது
பங்குகளை விற்பதற்கு மோர்கன் ஸ்டான்லி நிறுவனம் முதன்மை முகவராக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்றைய வர்த்தக நாளின் முடிவில் ஜோமாட்டோ நிறுவனத்தின் பங்குகள் 1.63% குறைந்து, 63.35 ரூபாய்க்கு வர்த்தகமாயின. இந்நிலையில், பிளாக் டீல் விற்பனை மதிப்பு குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.