கேரள மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட உள்ளது.கேரளா மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு பேருந்துகளிலும் வரும் 31ம் தேதிக்குள் சிசிடிவி கேமரா பொருத்தப்படும் என மாநில போக்குவரத்து துறை மந்திரி தெரிவித்துள்ளார். இதில் பேருந்தின் முன்புறம் மற்றும் பின்புறம் கேமராக்கள் பொருத்தப்படும். இதனால் பேருந்தின் உள்ளே மற்றும் பேருந்துக்கு வெளியே நடக்கும் விதிமீறல்கள் எளிதாக கண்டறிய முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இது தவிர நவம்பர் ஒன்றாம் தேதி முதல் பேருந்துகள் உள்ளிட்ட கனரக வாகனங்களில் முன் இருக்கைகளில் இருக்கும் ஓட்டுனர்கள் சீட் பெல்ட் அணிய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.