திருப்பரங்குன்றம் வழிபாட்டு தலத்தை சுற்றியுள்ள விவகாரங்கள் குறித்து ஹிந்து தர்ம பரிஷத் உள்ளிட்ட அமைப்புகள் உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் பொதுநல வழக்கு தொடர்ந்தன. இன்று நடந்த விசாரணையில், உச்சநீதிமன்றத்தில் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான வழக்குகள் நிலுவையில் உள்ளதால், அனைத்து வழக்குகளையும் தள்ளுபடி செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
வழக்கு விசாரணையின் போது, "திருப்பரங்குன்றம் மக்கள் சண்டை போடவில்லை, ஆனால் நீங்கள் சண்டை போட வைத்துவிடுவீர்கள் போல" என்று நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். மேலும், "ஏன் இது போன்ற வழக்குகளை தாக்கல் செய்கிறீர்கள்?" என்று மனுதாரர்களிடம் கேள்வி எழுப்பினர்.