பிரான்ஸ் அதிபர் மற்றும் ஐரோப்பிய யூனியன் தலைவர் சீனா பயணம் - ஜி ஜின்பிங் உடன் சந்திப்பு

April 5, 2023

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி உற்சுலா வான்டெர் லேயன் ஆகியோர், 3 நாள் பயணமாக இன்று சீனா செல்கின்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அவர்கள் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பு உலக அரங்கில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் போது, உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக, இமானுவேல் மேக்ரான், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டார். […]

பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைமை அதிகாரி உற்சுலா வான்டெர் லேயன் ஆகியோர், 3 நாள் பயணமாக இன்று சீனா செல்கின்றனர். சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அவர்கள் சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பு உலக அரங்கில் மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. இதன் போது, உக்ரைன் - ரஷ்யா போர் நிறுத்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இமானுவேல் மேக்ரான், அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் தொலைபேசி உரையாடலில் ஈடுபட்டார். அப்போது, போர் நிறுத்தம் குறித்து சீனாவுடன் பேசுவது குறித்து முடிவெடுக்கப்பட்டதாக தகவல் வெளிவந்துள்ளது. “ஐரோப்பிய பிராந்தியத்தில் அமைதியை ஏற்படுத்த உடனடியாக போர் நிறுத்தத்தை கொண்டு வர வேண்டும்” என்று பேசப் போவதாக மேக்ரானின் அலுவலக அறிக்கை தெரிவித்துள்ளது. இது தவிர, பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்களை முன்னிட்டு இந்த சந்திப்பு நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தொடர்பான செய்திகள்

மேலும் படிக்க
Ks-7 இஸ்ரேல் இந்தியர்களுக்கு அவசர உதவி எண் அறிவிப்பு இஸ்ரேலில் கடந்த சனிக்கிழமையில் இருந்து ஹமாஸ் அமைப்பு தீவிர தாக்குதல் நடத்தி வருகிறது. பாலஸ்தீன ஹமாஸ் அமைப்பு இஸ்ரேல் மீது பயங்கர தாக்குதல் நடத்தி வருவதில் இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் பலியாகி உள்ளனர். மேலும் இஸ்ரேல் ஹமாஸ் அமைப்பை முற்றிலும் அழிக்க போவதாக கூறி போர்க்களத்தில் இருக்கிறது. இதனால் காசா முழுவதும் உணவு, குடிநீர், மின்சாரம் உட்பட அனைத்து செய்திகளையும் துண்டித்துள்ளது. தற்போது ஐந்தாவது நாளாக போர் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இங்கு பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களுக்கு உதவுவதற்காக இந்தியா 24 மணி நேர அவசர சேவையை அறிவித்திருக்கிறது. இதில் பாலஸ்தீனத்தில் உள்ள இந்தியர்களில் அவசர உதவி தேவைப்படுபவர்கள் 24 மணி நேரமும் செயல்படும் இந்தியர்களுக்கான அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது. மேலும் அங்குள்ள இந்தியர்களின் நிலையை தெரிந்து கொள்ளவும் அவர்களின் உறவினர்களுக்கு இங்கு வெளியுறவுத் துறையில் ஒரு தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான அவசர தொலைபேசி எண்கள் மற்றும் வாட்ஸாப் எண்களும் கொடுக்கப்பட்டுள்ளன. 180011778797 இலவச எண் +91-11-23012113 +91-11-23014104 +91-11-23017905 +919968291988 Emergency-Helpline-Notification-for- Indians-in-Israel இந்திய அவசர உதவி எண், இஸ்ரேல் போர், இஸ்ரேல் வாழ் இந்தியர்கள்,Emergency Helpline Notification for Indians in Israel இந்தியா
1 2 3 806

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2026 தமிழ்க்களம்
envelopecrossmenu