கடந்த நவம்பர் 1ம் தேதி, மகளிர் விண்வெளி வீராங்கனைகள் மட்டும் பங்கேற்ற விண்வெளி நடைபயணம் நிகழ்ந்தது. வரலாற்றில் 4வது முறையாக, பெண்கள் மட்டுமே பங்கேற்கும் விண்வெளி நடைபயணம் இதுவாகும். இதன் போது, 2 நாசா விண்வெளி வீராங்கனைகள் நடைபயணத்தில் ஈடுபட்டனர். இந்த காணொளியை நாசா பகிர்ந்துள்ளது.
ஜாஸ்மின் மூபெல்லி மற்றும் லாரல் ஓ ஹாரா ஆகிய 2 விண்வெளி வீராங்கனைகள், சர்வதேச விண்வெளி நிலையத்தில் தங்கி உள்ளனர். அவர்கள், நவம்பர் 1 காலையில் விண்வெளி நடைபயணத்தில் ஈடுபட்டனர். இது அவர்கள் இருவருக்குமே முதல் விண்வெளி நடைபயணம் என்பது குறிப்பிடத்தக்கது. சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள தொலை தொடர்பு சாதனங்களை பழுது பார்க்கவும், சூரிய எரிசக்தி தகடுகளை ஒழுங்கு செய்யவும், இந்த விண்வெளி நடைபயணத்தை அவர்கள் மேற்கொண்டனர். இந்த விண்வெளி நடைபயண காணொளியை நாசா தற்போது வெளியிட்டுள்ளது. இது இணையத்தில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.