அனைத்து நிலை ஊழியர்களையும் பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் சேர்க்கலாம்: தமிழக அரசு 

November 9, 2022

அனைத்து நிலை ஊழியர்களையும் பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் சேர்க்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது. செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பத்திரிகையாளர் நல வாரிய கூட்டம் அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான பத்திரிக்கையாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பில் அரசு அங்கீகார அடையாள அட்டை வைத்திருக்கக்கூடிய பத்திரிகையாளர் மட்டும் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் பத்திரிக்கை […]

அனைத்து நிலை ஊழியர்களையும் பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் சேர்க்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கி உள்ளது.

செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் பத்திரிகையாளர் நல வாரிய கூட்டம் அமைச்சர் சுவாமிநாதன் தலைமையில் தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெற்றது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் வெளியான பத்திரிக்கையாளர் நல வாரிய உறுப்பினர் சேர்க்கை தொடர்பான அறிவிப்பில் அரசு அங்கீகார அடையாள அட்டை வைத்திருக்கக்கூடிய பத்திரிகையாளர் மட்டும் இடம்பெறுவார்கள் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், இன்று நடைபெற்ற கூட்டத்தில் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சிகளில் பணிபுரியக்கூடிய அனைத்து நிலை ஊழியர்களையும் பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் சேர்ப்பது குறித்து ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன் மூலம் ஒரு நிறுவனத்தில் 10 பேர் மட்டுமே நலவாரிய உறுப்பினராக சேர முடியும் என்ற நிலை மாறி செய்தியாளர், ஒளிப்பதிவாளர், ஆசிரியர், உதவி ஆசிரியர் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் இருக்கக்கூடிய ஊழியர்களை பத்திரிக்கையாளர் நல வாரியத்தில் சேர முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

0
0
பகிர:

தமிழ் உணவு

கோகோ மிட்டாய்
முறுக்கு
சில்லுக் கருப்பட்டி
சாத்தூர் சேவு
பதிப்புரிமை © 2025 தமிழ்க்களம்
envelopecrossmenu