நாகாலாந்தில் அனைத்து கட்சிகளும் பாஜக கூட்டணிக்கு ஆதரவு அளித்துள்ளதால் எதிர்க்கட்சி இல்லா ஆட்சி அமைகிறது.
நாகாலாந்து மாநிலத்தில் கடந்த பிப். 27-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. இதில், ஆளும் தேசிய ஜனநாயக முற்போக்கு கட்சி(என்டிபிபி) -பாஜக கூட்டணி மொத்தம் 37 இடங்களில் வெற்றி பெற்றது. என்சிபி-7, என்பிபி-5, எல்ஜேபி(ராம் விலாஸ்), நாகா மக்கள் முன்னணி(என்பிஎஃப்), ஆர்பிஐ(அத்வாலே) ஆகிய கட்சிகள் தலா இரண்டு இடங்களிலும், ஜேடி(ஐ) ஒரு இடத்திலும், சுயேட்சைகள் நான்கு இடங்களிலும் வெற்றி பெற்றன. இரண்டாவது முறையாக பாஜக கூட்டணி ஆட்சி அமைக்க வெற்றி பெற்ற பிற கட்சிகள் தங்களின் நிபந்தனையற்ற ஆதரவினை அளிக்க முன்வந்துள்ளன. எதிர்க்கட்சிகள் அனைத்தும் நிபந்தனையற்ற ஆதரவு அளிக்க முன்வந்துள்ளதால் நாகாலாந்தில் மீண்டும் ஒரு அனைத்துக் கட்சி ஆட்சி அமைய உள்ளது.














